உள்ளூர் செய்திகள்
நகராட்சி அதிகாரிகளுடன் சிவா எம்.எல்.ஏ. ஆலோசனை நடத்திய காட்சி.

கொம்பாக்கத்தில் அடிப்படை வசதிகள்- நகராட்சி அதிகாரிகளுடன் சிவா எம்.எல்.ஏ. ஆலோசனை

Published On 2022-02-26 09:37 IST   |   Update On 2022-02-26 09:37:00 IST
கொம்பாக்கத்தில் செய்யப்பட அடிப்படை வசதிகள் குறித்து நகராட்சி அதிகாரிகளுடன் சிவா எம்.எல்.ஏ. ஆலோசனை நடத்தினார்.
புதுச்சேரி:

வில்லியனூர் தொகுதியில், புதுவை நகராட்சியின் கீழ் வரும் கொம்பாக்கம் வார்டில் அடிப்படை வசதிகள் மேற்கொள்வது குறித்து எதிர்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. நகராட்சி அஅதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். புதுவை நகராட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் நகராட்சி ஆணையர் சிவக்குமார், செயற் பொறியாளர் சிவபாலன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். 

கூட்டத்தில், கொம்பாக்கம் பேட், சிவகிரி நகர், துர்கா நகர், லஷ்மி நகர், ஒட்டம்பாளையம், செட்டிக்குளம், குப்பம் பேட் உள்ளிட்ட பகுதிகளில் சாலை வசதி, கழிவுநீர் வாய்க்கால், மின்தகன மேடை, மார்க்கெட் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஸ்மார்ட் சிட்டி மற்றும் எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதியின் கீழ் பணிகளை மேற்கொள்ள சிவா எம்.எல்.ஏ. கேட்டுக்கொண்டார். அப்போது  மேற்கண்ட பணிகளை விரைந்து முடித்திட ஆய்வு மேற்கொண்டு, திட்ட மதிப்பீடு தயார் செய்யுமாறு சிவா எம்.எல்.ஏ. வலியுறுத்தினார். 

ஆலோசனை கூட்டத்தில் ம.தி.மு.க. கபிரியேல், வீரசெல்வம், சத்தியமூர்த்தி, முன்னாள் கவுன்சிலர் கந்தசாமி, ஜீவா, ஜெகன், மோகன், சுரேஷ், ரமேஷ், ஜனா, அருண், பரதன், தேசிகன், ராஜேந்திரன், விஸ்வநாதன் உள்ளிட்ட தொகுதியை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

Similar News