உள்ளூர் செய்திகள்
தண்ணீர் திருவிழா நிகழ்ச்சியை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.

உப்பளம் தொகுதியில் தண்ணீர் திருவிழா- அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

Published On 2022-02-26 09:27 IST   |   Update On 2022-02-26 09:27:00 IST
உப்பளம் தொகுதியில் தண்ணீர் திருவிழாவை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:

புதுவை மாநிலம் முழுவதும் தண்ணீர் திருவிழா தற்போது நடை பெற்று வருகிறது. 2 நகராட்சிகள், 5 கொம்யூன் பஞ்சாயத்து என 7 நீர் குடங்கள் ஒவ்வொரு நீர் நிலைகளான குளங்கள் மற்றும் ஏரிகளுக்கு சென்று நீர் கலக்கும் நிகழ்ச்சி  கடந்த  2-ந் தேதி சதுப்புதில் நாள் தினத்தில் நல்லாட்சிக்கான கூட்டு இயக்கம் மூலம் தொடங்கப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக புதுவை நகராட்சிக்குட்பட்ட உப்பளம் தொகுதி தமிழ்தாய் நகரில் உள்ள பொறையாத்தம்மன் குளத்தில் நீர்குடம் பயணத்தை தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி தொடங்கி வைத்தார். மேளதாளம் தப்பாட்டம் முழங்க வீதி வழியாக ஊர்வலமாக நீர்குடத்துக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது-.

இதில் அங்கன்வாடி ஊழியர் லலிதா வரவேற்றார். குளங்கள் காப்போம் குழு கார்த்திகேயன், சூர்யா ஆகியோர் தண்ணீரின் அவசியம் குறித்து விளக் கினர். தண்ணீரின் சிக்கனம், வருங்கால தலைமுறையினருக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் குறித்து அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. பேசினார்.

இதில் ஊர் முக்கிய பிரமுகர்கள் காந்தி, பன்னீர்செல்வம், ஞானவேல், சங்கரநாராயணன், பத்மநாபன் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர். அனைவரும் தண்ணீரின் அவசியம் குறித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

அதன் பின் ஊசுடு ஏரியில் இருந்து கொண்டு வரப்பட்ட நீர் பொறையாத்தம்மன் கோவில் குளத்தில் கலக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை அங்கன்வாடி ஊழியர்கள் சாரதா, சூசை மேரி ஆகியோர் செய்திருந்தனர்.

நிகழ்ச்சியில் தி.மு.க. தொகுதி செயலாளர் சக்திவேல், ஆதி திராவிடர் துணை அமைப்பாளர் தங்கவேல், கிளை செயலாளர் செல்வம், காலப்பன், ரகுமான், மோரீஸ் மற்றும் ஊர் மக்கள் கலந்து கொண்டனர்.

Similar News