உள்ளூர் செய்திகள்
கைது

17 வயது பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் கைது

Published On 2022-02-26 09:22 IST   |   Update On 2022-02-26 09:22:00 IST
ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் 17 வயது பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பகுதியை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி ஒருவர் கடந்த 4 மாதத்துக்கு முன்பு திடீரென மாயமானார். இதையடுத்து மாணவியின் பெற்றோர் பவானிசாகர் போலீசில் புகார் செய்தனர்.

இதையடுத்து போலீசார் மாணவி மாயம் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். போலீசாரின் விசாரணையில் மாணவியை பவானிசாகர் கணபதி நகர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரது மகன் லோகேஷ்குமார் (25) என்ற வாலிபர் ஆசைவார்த்தை கூறி மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் லோகேஷ்குமார் மற்றும் மாணவியை தேடி வந்தனர். இந்நிலையில் அவர்கள் இருக்கும் இடம் பற்றி தெரிய வந்ததும் போலீசார் விரைந்து சென்று மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் லோகேஷ் குமார் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News