உள்ளூர் செய்திகள்
கவுண்டம்பாளையத்தில் தீயில் கருகிய புல்வெளி மற்றும் செடி, கொடிகள்.

சென்னிமலையில் காய்ந்த புல்வெளி செடிகளில் தீடீர் தீ விபத்து

Published On 2022-02-25 15:46 IST   |   Update On 2022-02-25 15:46:00 IST
சென்னிமலை காட்டுப்பகுதியில் திடீர் தீ விபத்தில் பல ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள புல்வெளிகள் மற்றும் செடி, மரங்கள் தீயில் கருகி சேதமானது.
சென்னிமலை:

சென்னிமலை காட்டுப்பகுதியில் திடீர் தீ விபத்தில் பல ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள புல்வெளிகள் மற்றும் செடி, மரங்கள் தீயில் கருகி சேதமானது. 

சென்னிமலையை அடுத்த கவுண்டம் பாளையத்தில் காட்டுப் பகுதியில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் காய்ந்த புல்வெளி, செடி, கொடிகள் உள்ளன. 

இதில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென வேகமாக கொளுந்துவிட்டு எரிந்தது. 

இதைப்பார்த்த அருகில் உள்ள பொதுமக்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ வேகமாக பரவியது. 

இதையடுத்து சென்னிமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் உடனடியாக  தீயணைப்பு துறையினர் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்தனர்.

ஆனால், தீ பிடித்த இடத்திற்கு தீயணைப்பு வாகனம் செல்ல அங்கு போதிய வழி இல்லாததால் புல்வெளியில் பிடித்த தீயை அணைப்பதில் தீயணைப்பு வீரர்கள் மிகுந்த சிரமப்பட்டனர். 

பின்னர் இலை, தழைகளை கொண்டு தீ மேலும் பரவாமல் முழுவ துமாக அணைத்தனர். 

இந்த திடீர் தீ விபத்தில் பல ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள புல்வெளிகள் மற்றும் செடி, மரங்கள் தீயில் கருகி சேதமானது. 

தீ எப்படி பிடித்தது என்று தீவிர விசாரணை நடத்தினர். மேலும் யாரேனும் தீயை சரியாக அணைக்காமல் பீடி அல்லது ஏதாவது பொருளை அங்கு வீசினார்களா? என்பது குறித்தும் விசாரணை நடத்தினர்.

Similar News