உள்ளூர் செய்திகள்
கொள்முதல் நிலையம் மூலம் விவசாயிகள் 6 ஆயிரம் நெல் மூட்டைகள் விற்பனை
சென்னிமலை அருகே உள்ள கொள்முதல் நிலையம் மூலம் விவசாயிகள் 6 ஆயிரம் நெல் மூட்டைகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னிமலை:
சென்னிமலை அருகே உள்ள கொள்முதல் நிலையம் மூலம் விவசாயிகள் 6 ஆயிரம் நெல் மூட்டைகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் 33 இடங்களில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகம் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப் பட்டு வருகிறது.
அதேபோல் சென்னி மலை அருகே வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற் பனை கூடத்தில் வேளாண் பொருட்களை 2 ஆயிரம் மெட்ரிக் டன் அளவில் இருப்பு வைக்கும் வகையில் குடோன் வசதி உள்ளது.
இங்கு தற்போது நெல் கொள் முதல் நிலையம் தொடங்கப் பட்டுள்ளது. இந்த கொள் முதல் நிலையத்தில் சுமார் 6 ஆயிரம் நெல் மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்து விற்பனை செய்துள்ளனர்.
சென்னிமலை ஒன்றியத் துக்கு உட்பட்ட எக்கட்டாம் பாளையம், எல்லைக்கிராமம், பசுவபட்டி ஆகிய ஊராட்சி பகுதிகளில் இருந்து விவசாயிகள் நெல் மூட்டைகளை கொண்டு வந்து இங்கு விற்பனை செய்கின்றனர்.
விவசாயிகளிடம் இருந்து நெல் 1 கிலோவுக்கு ரூ.20 ரூபாய் 60 பைசா வரை இங்கு கொள்முதல் செய்யப் படுகிறது.
இது குறித்து விவசாயிகள் கூறும் போது, வெப்பிலி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்யப் படும் நெல்லுக்கு உரிய விலை கிடைக்கிறது.
இதற்காக விவசாயிகளிடம் இருந்து எந்த வித கட்டணமும் வாங்காமல் நெல் கொள்முதல் செய்கின்றனர்.
நெல் மூட்டைகளை கொண்டு வரும் விவசாயிகளுக்கு உதவியாக நெல் மூட்டைகளை ஏற்றி இறக்கும் பணியில் 15&க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
இவர்களுக்கான கூலியை நாங் களே எங்கள் விருப்பம் போல் கொடுத்து விடுகிறோம். கொள்முதல் நிலையத்தில் நெல்லை விற்பனை செய்வதற்கு ஆன்&லைனில் பதிவு செய்யும் முறையை பின் பற்றுவதில் பல விவ சாயிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது.
அதனால் பதிவு செய்யும் முறையை எளிமையாக்கினால் விவசாயிகளுக்கு இன்னும் வசதியாக இருக்கும் என்றனர்.