உள்ளூர் செய்திகள்
அஸ்வின்குமாருக்கு சான்றிதழை பா.ஜனதா தலைவர் சாமிநாதன் வழங்கினார்.

அஸ்வின்குமாருக்கு இளைஞர் அணி செயலாளர் பதவி

Published On 2022-02-25 15:16 IST   |   Update On 2022-02-25 15:16:00 IST
காமராஜர் நகர் தொகுதி பா.ஜனதா பிரமுகர் அஸ்வின்குமாருக்கு இளைஞர் அணி செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:

காமராஜர் நகர் தொகுதி ரெயின்போ நகரைச் சேர்ந்தவர் அஸ்வின்குமார். இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக தன்னை பா.ஜனதாவில் இணைத்துக்கொண்டு கட்சி பணிகளை செய்து வருகிறார்.  மேலும் பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா  வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்காக  முழு ஒத்துழைப்பு அளித்து தேர்தல் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில்,  காமராஜர் நகர் தொகுதி எம்.எல்.ஏ. ஜான்குமாரின் பரிந்துரையின் பேரில் அஸ்வின்குமாருக்கு மாநில பா.ஜனதா இளைஞரணி செயலாளர் பதவியை பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் வழங்கியுள்ளார். 

புதுவை பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அஸ்வின் குமாருக்கு மாநில இளைஞரணி செயலாளர் பதவி நியமனத்திற்கான  சான்றிதழை பா.ஜனதா மாநில தலைவர் சாமி நாதன் அஸ்வின் குமாருக்கு வழங்கினார்.  இந்த நிகழ்ச்சியில் மாநில இளைஞரணி தலைவர் கோவேந்தன், காமராஜர் நகர் பா.ஜனதா நிர்வாகி தேவராஜ் ஆகியோர் உடனிருந்தனர். 

இளம்வயதில் பா.ஜனதாவில் தன்னை இணைத்துக் கொண்டு சீரிய முறையில் கட்சி பணியாற்றி வரும் அஸ்வின்குமாருக்கு மாநில பா.ஜனதா இளைஞர் அணி செயலாளர் பதவி வழங்கப்பட்டதற்கு பா.ஜனதா கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Similar News