உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

5 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்ட முதியவர் சிறையில் அடைப்பு

Published On 2022-02-25 15:04 IST   |   Update On 2022-02-25 15:04:00 IST
அந்தியூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 5 ஆண்டு தண்டனை விதித்து சிறையில் அடைக்க ஈரோடு மகிளாநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பவானி:

அந்தியூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு  5 ஆண்டு தண்டனை விதித்து சிறையில் அடைக்க ஈரோடு மகிளாநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அந்தியூர் தவிட்டுப்பாளையம் ஏ.கே. பழனியப்பா வீதியை சேர்ந்தவர் தேவராஜ் (58).  இவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 20-ந் தேதி அந்த பகுதியில் இருந்த ஒரு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். 

இது குறித்து அந்த சிறுமி அவரது உறவினர்களிடம் கூறினார். இதனையடுத்து சிறுமியின் தாய் பவானி அனைத்து மகளிர்  போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். 

அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தேவராஜை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இதையடுத்து அவரை போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இது தொடர்பான வழக்கு ஈரோடு மகிளா நீதி மன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில் நீதிபதி மாலதி விசாரணை நடத்தி தீர்ப்பு  கூறினார். 

இதில் தேவராஜீக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்தும்  நீதிபதி உத்தரவிட்டார். ரூ.1000 கட்ட தவறினால் மேலும் 2 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கினார். 

இதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.50 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கவும் உத்தர விடப்பட்டது.  

இதையடுத்து தேவராஜ் மீண்டும் கோவை மத்திய சிறையில் அடைக் கப்பட்டார்.இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜெயந்தி நியமிக்கப்பட்டு வாதாடினார்.

Similar News