உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

கூரியர் நிறுவன ஊழியர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

Published On 2022-02-25 14:53 IST   |   Update On 2022-02-25 14:53:00 IST
கூரியர் நிறுவன ஊழியர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
சேதராப்பட்டு: 

வில்லியனூரை அடுத்த அரும்பார்த்தபுரம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் புதுவையில் கூரியர் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்‌. கடந்த 20-ந் தேதி இரவு வீட்டை விட்டு புறப்பட்டு சென்ற இவர் சேந்தநத்தம் சுடுகாட்டு பகுதியில் பாட்டிலால் குத்தப்பட்டும், கடுமையாக தாக்கப்பட்டும் இறந்து கிடந்தார். 

இதுகுறித்து வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டனர். விசாரணையில் சீனிவாசன் சேந்தநத்தம் சாராய கடைக்கு மது குடிக்க சென்ற போது, சீனிவாசனை 2 பேர் அழைத்து சென்று பாட்டிலால் கழுத்தை அறுத்து கொலை செய்து பணத்தை பறித்து சென்று தலைமறைவாகி இருந்தது தெரியவந்தது.  

இந்த கொலையில்  சம்பந்தப்பட்ட சேந்தநத்தம் பகுதியை சேர்ந்த சஞ்சீவ் என்பவரை ஏற்கனவே போலீசார் கைது செய்தனர். முக்கிய கொலை யாளியான சேந்தநத்தம் கிராமத்தை சேர்ந்த புகழ் (22) என்பவரை இன்று  காலை  போலீசார் கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News