உள்ளூர் செய்திகள்
நாகை அருங்காட்சியகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட முதுமக்கள் தாழி.

பழமையான முதுமக்கள் தாழி அருங்காட்சியகத்திடம் ஒப்படைப்பு

Published On 2022-02-24 15:55 IST   |   Update On 2022-02-24 15:55:00 IST
வேதாரண்யம் பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட பழமையான முதுமக்கள் தாழி அருங்காட்சியகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுகா செட்டிப்புலம், ஆயக்காரன்புலம், புஷ்பவனம் உள்ளிட்ட பகுதிகளில் பூமியில் இருந்து எடுக்கப்பட்ட சிவன், நந்தி, விநாயகர், மரக்கிளைகள் மற்றும் செட்டிப்புலத்தில் எடுக்கப்பட்ட 1500 ஆண்டுகளுக்கு முன்புள்ள முதுமக்கள் தாழி ஆகியவை வேதாரண்யம் தாலுக்கா அலுவலகத்தில் நீண்ட நாட்களாக வைக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து கோட்டாட்சியர் துரைமுருகன் இந்த அரிய பொருள்களை நாகை அருங்காட்சியகத்திற்கு  அனுப்பி வைக்க உத்தரவிட்டார். 

தொடர்ந்து தாசில்தார் ரவிச்சந்திரன், உதவி தாசில்தார் வேதையன் மற்றும் அலுவலர்கள் இந்த முதுமக்கள் தாழி மற்றும் சிலைகளை வேனில் நாகை அருங்காட்சியகத்திற்கு வேதாரண்யம் கோட்டாட்சியர் துரை முருகன் முன்னிலையில் அனுப்பி வைக்கப்பட்டது.

Similar News