உள்ளூர் செய்திகள்
ஆணழகன் போட்டியில் பல்வேறு பிரிவில் பட்டத்தை வென்றவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்களை அமைச்சர் நமச்சிவாயம் வழங்

ஆணழகன் போட்டி

Published On 2022-02-24 13:07 IST   |   Update On 2022-02-24 13:07:00 IST
புதுவை உப்பளம் ராஜீவ்காந்தி உள் விளையாட்டு அரங்கில் ஆணழகன் போட்டி நடந்தது.
புதுச்சேரி:

புதுவை உப்பளம் ராஜீவ்காந்தி உள் விளையாட்டு அரங்கில் 12-வது ஜூனியர் மிஸ்டர் இந்தியா 2022 ஆணழகன் போட்டி நடந்தது.

போட்டியை இந்தியன் பாடி பில்டர்ஸ் அசோசியேஷன், புதுவை பாடி பில்டர்ஸ் மற்றும் பிட்னஸ் இணைந்து நடத்தின. ஜூனியர் பாடி  பில்டர், மாஸ்டர், மாற்றுத் திறனாளிகள், பெண்கள் என பல்வேறு பிரிவுகளில் போட்டி நடந்தது. 

புதுவை, தமிழகத்தை சேர்ந்த 12 பெண்கள்  உள்பட 250-க்கும்  மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாற்றுத்திறனாளிகள் பிரிவில் சென்னை கொடுங்கையூர் சுரேஷ் ஆணழகன் பட்டம்  வென்றார். பல்வேறு பிரிவில் ஆணழகன் பட்டத்தை வென்றவர்களுக்கு அமைச் சர்கள் நமச்சிவாயம், தேனீ.ஜெயக்குமார், எதிர்க்கட்சித்  தலைவர் சிவா ஆகியோர் பதக்கம், சான்றிதழ் வழங்கினர். 

இதற்கான ஏற்பாடுகளை புதுவை பாடி பில்டர்ஸ் மற்றும் பிட்னஸ் சேர்மன் ரமேஷ்குமார்  தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Similar News