உள்ளூர் செய்திகள்
ஜெயங்கொண்டம் அருகே தேர்தல் முன்விரோதத்தில் வக்கீல் குத்திக்கொலை
தேர்தல் விரோதத்தில் வக்கீல் ஒருவர் பட்டப்பகலில் வீட்டு முன்பு குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அரியலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர், ஜெயங்கொண்டம் நகராட்சிகள், உடையார்பாளையம், வரதராஜன்பேட்டை பேரூராட்சிகளில் கடந்த 19-ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது.
இதில் உடையார்பாளையம் பேரூராட்சி 13-வது வார்டில் பிரபு என்பவரது மனைவி இலக்கியா என்பவர் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். இவருக்கு ஆதரவாக அதே பகுதியை சேர்ந்த சின்னசாமி மகன் அறிவழகன் (வயது 36) என்பவர் செயல்பட்டு வந்துள்ளார்.
திருமணமாகாத அவர் ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் வக்கீலாக பணியாற்றி வந்தார். சுயேட்சை வேட்பாளர் இலக்கியாவுக்காக அறிவழகன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். இது எதிர்த்து போட்டியிட்டவர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இதற்கிடையே தேர்தல் முடிவடைந்த நிலையில் அறிவழகனை தீர்த்துக்கட்ட ஒரு கும்பல் திட்டம் தீட்டியது. இந்த நிலையில் இன்று காலை அறிவழகன் தனது வீட்டின் முன்பு நின்றுகொண்டிருந்தார். மேலும் அவர் கோர்ட்டுக்கு புறப்படுவதற்காக தயாரானார்.
அப்போது அந்த பகுதிக்கு ஒரு ஆட்டோ மின்னல் வேகத்தில் வந்தது. அறிவழகன் வீட்டு முன்பு நின்ற அந்த ஆட்டோவில் இருந்து திபுதிபுவென ஒரு கும்பல் இறங்கியது. அவர்கள் திடீரென்று தாங்கள் வைத்திருந்த ஒருவிதமான பொடியை அறிவழகன் முகத்தில் தூவினர். இதனை சற்றும் எதிர்பாராத அவர் நிலைகுலைந்தார். அப்போது அந்த கும்பல் கத்தியால் அறிவழகனை சரமாரியாக குத்திவிட்டு அதே ஆட்டோவில் தப்பிச்சென்றது.
இதில் அறிவழகன் ரத்த வெள்ளத்தில் தனது வீட்டின் முன்பு துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதைப் பார்த்த அவரது பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுபற்றி உடையார் பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு கலைகதிரவன் மற்றும் போலீசார் விரைந்து வந்து கொலையுண்ட அறிவழகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள்.
தேர்தல் விரோதத்தில் வக்கீல் ஒருவர் பட்டப்பகலில் வீட்டு முன்பு குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அரியலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அந்த பகுதியில் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.