உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

வாக்கு மையங்களில் சிறப்பு ஏற்பாட்டால் மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி

Published On 2022-02-20 14:02 IST   |   Update On 2022-02-20 14:02:00 IST
அரியலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்ததற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர்:

நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அரியலூர் மாவட்டத்தில் 75.69 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடை பெற்றுள்ளது.

அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் நகராட்சிகளிலும், உடையார்பாளையம் மற்றும் வரதராசன்பேட்டை பேரூராட்சிகளிலும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அமைதியாக நடை பெற்றது. 

இந்த தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில் 102 வாக்கு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அங்கு மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக சாய்தளம் அமைக்கப்பட்டிருந்தது.

இதனால் தாங்கள் எந்தவித சிரமமும் இன்றி வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்கினை பதிவு செய்ததாக கூறியதோடு, சிறப்பான ஏற்பாடுகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

ஓரிரு வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சிறு சிறு கோளாறுகள் ஏற்பட்டன. பின்னர், அவை சரி செய்யப்பட்டு, சற்று காலதாமதத்துடன் வாக்குப்பதிவு தொடங்கியது.
ஒரு சில வாக்குச் சாவடிகளில் மாலை 7 மணிக்கு பெண்கள் வாக்களிக்க காத்திருந்ததைத் தொடர்ந்து, அவர்களுக்கு அடையாள வில்லைகள் வழங்கி வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்றது. 

மேற்கண்ட நகர்ப்புற பகுதிகளில் காலை முதல் வாக்குப் பதிவு விறுவிறுப் பாக நடந்ததைத் தொடர்ந்து, சராசரியாக 75.69 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இதில் 24,518 வாக்காளர்கள் கொண்ட அரியலூர் நகராட்சியில் 17,453 பேர் வாக்களித்து உள்ளனர். இது 71.18 சதவீதமாகும். அதே போல் 28,042 வாக்காளர்கள் கொண்ட ஜெயங்கொண்டம் நகராட்சியில் 21,435 பேர் வாக்களித்துள்ளனர்.

Similar News