உள்ளூர் செய்திகள்
வாக்குப்பதிவு மையத்தை பார்வையிட்ட திருமாவளவன்

தேர்தல் முடிவுக்கு பிறகு முதலமைச்சருடன் பேசுவோம்- திருமாவளவன் பேட்டி

Published On 2022-02-19 15:14 IST   |   Update On 2022-02-19 15:14:00 IST
சட்டமன்ற தேர்தலில் எப்படி கூட்டணியோடு ஒற்றுமையாக சேர்ந்து வெற்றி பெற்றோமோ அதேபோல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெறுவோம் என்று திருமாவளவன் கூறினார்.
தாம்பரம்:

தாம்பரம், கடப்பேரி பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தி.மு.க. கூட்டணியே வெற்றிபெறும். தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளை தி.மு.க. கூட்டணியே கைப்பற்றும்.

தி.மு.க.வினர் எதுவும் செய்யவில்லை என்று அ.தி.மு.க.வினர் பொய் பிரசாரம் செய்கின்றனர். ஆட்சிக்கு வந்து 8 மாத காலங்கள் தான் ஆகிறது. இதற்குள்ளாகவே இந்தியாவிலேயே சிறந்த முதல்வர் என்று மு.க.ஸ்டாலின் பெயர் பெற்று உள்ளார். அ.தி.மு.க.வின் பொய் பிரசாரம் எடுபடாது.

சட்டமன்ற தேர்தலில் எப்படி கூட்டணியோடு ஒற்றுமையாக சேர்ந்து வெற்றி பெற்றோமோ அதேபோல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெறுவோம்.

தாம்பரம் மாநகராட்சி மேயர் பதவி பட்டியலின பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேயர் பதவியை பெறுவது குறித்து தேர்தல் முடிவுக்கு பின்னர் முதல்-அமைச்சருடன் பேசப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News