உள்ளூர் செய்திகள்
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் கார் கவிழ்ந்து 4 பேர் படுகாயம்
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4பேர் படுகாயமடைந்தனர்.
மாமல்லபுரம்:
குரோம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அருணகிரி. இவர் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பாண்டிச்சேரிக்கு காரில் புறப்பட்டார்.
மாமல்லபுரம் அரசு மருத்துவமனை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த பஸ் திடீரென திரும்பியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்பு மீது மோதி கவிழ்ந்தது.
இதில் அதிர்ஷ்டவசமாக அருணகிரி மற்றும் அவரது மனைவி உள்பட 4 பேரும் பலத்த காயத்துடன் உயிர் தப்பினர்.
இதேபோல் மாமல்லபுரம் அடுத்த புலிக்குகை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த மற்றொரு கார் விபத்தில் இரண்டு வக்கீல்கள் உட்பட 5பேர் காயத்துடன் தப்பினர்.
இந்த விபத்துக்கள் குறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.