உள்ளூர் செய்திகள்
தேன்கனிக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்கு எண்ணும் மையத்தில் ச

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்கு எண்ணும் மையங்களில் முன்னேற்பாடு பணிகள் கலெக்டர் நேரில் ஆய்வு

Published On 2022-02-18 15:41 IST   |   Update On 2022-02-18 15:41:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி:

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்கு எண்ணும் மையங்களில் முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் மாநகராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி மற்றும் கெலமங்கலம், தேன்கனிக் கோட்டை, காவேரிப்பட்டணம், பர்கூர், ஊத்தங்கரை, நாகோஜனஹள்ளி ஆகிய 6 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப் பதிவு நாளை (சனிக்கிழமை) அன்று நடைபெற உள்ளது.

கெலமங்கலம் பேரூராட்சிக் குட்பட்ட 15 வார்டுகளுக்கும், தேன்கனிக்கோட்டை பேரூராட்சிக் குட்பட்ட 18 வார்டுகளுக்கும், வாக்கு எண்ணிக்கை தேன்கனிக் கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளா கத்தில் வருகிற 22-ந் தேதி அன்று நடைபெற உள்ளது. 

இந்த மையத்தில் வாக்குபதிவு எந்திரங்கள் வைக்கப்படும் பாதுகாப்பு அறை, வாக்கு எண்ணும் இடம், வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் குறித்தும், பாதுகாப்பு தடுப்பு வலைகள் அமைத்தல் போன்ற பணிகள் குறித்தும், வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

ஓசூர் மாநகராட்சிக் குட்பட்ட 45 வார்டுகளுக்கு மத்திகிரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் வாக்கு எண்ணும் பணி நடைபெற உள்ளது. 

இந்த மையத்தில் வாக்கு பதிவு எந்திரங்கள் வைக்கப்படும் பாதுகாப்பு அறை, வாக்கு எண்ணும் இடம், வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் குறித்தும், பாதுகாப்பு தடுப்பு வலைகள் அமைத்தல் போன்ற பணிகள் குறித்தும், வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர் களுக்கு தேவையான அடிப் படை வசதிகள் குறித்தும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி,  மாவட்ட வருவாய் அலுவலர் (தேசிய நெடுஞ்சாலை) முத்துமாரி, ஓசூர் உதவி கலெக்டர் தேன்மொழி, ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், தாசில்தார்கள் கிருஷ்ண மூர்த்தி, குருநாதன், தேன்கனிக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் மஞ்சு, மாநகராட்சி பொறியாளர்கள், பேரூராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Similar News