உள்ளூர் செய்திகள்
மாணவர்கள் போராட்டம் நடத்திய போது எடுத்த படம்.

திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள்

Published On 2022-02-18 14:12 IST   |   Update On 2022-02-18 14:12:00 IST
இலையூர் கிராமத்தில் மாணவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அரியலூர்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூர் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப் பள்ளியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.  

பள்ளியில் வழங்கப்படுகின்ற மதிய உணவு உரிய நேரத்திற்கு மாணவர்களுக்கு வழங்கப்படாமல் தட்டுப்பாட்டுடன் உணவு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவர்கள் புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனதெரிகிறது.

இந்நிலையில் நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற மாணவர்களுக்கு உரிய நேரத்திற்கு மதிய உணவை வழங்கப்படவில்லை. இதில் அதிர்ச்சி அடைந்த அப்பள்ளி மாணவர்கள் பள்ளி முன்பு உள்ள ஜெயங்கொண்டம் -செந்துறை சாலையில் இலையூர் பஸ் நிறுத்தம் அருகில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் ஆசிரியர்கள் சமரசம் செய்து பள்ளிக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அங்கு சென்ற மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து பள்ளி தலைமையாசிரியர் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.

இதனால் ஜெயங்கொண்டம்&செந்துறை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Similar News