உள்ளூர் செய்திகள்
.

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 8 பவுன் நகை அபேஸ்

Published On 2022-02-17 16:26 IST   |   Update On 2022-02-17 16:26:00 IST
கிருஷ்ணகிரியில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 8 பவுன் நகை திருடிய பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஆலப்பட்டி வௌகலஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி நதியா (வயது 23).

இந்த நிலையில் நேற்று நதியா, தனது தாய் வீட்டுக்கு சென்று டவுன் பஸ்சில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் தனது கைப்பையில் 8 பவுன் தங்க நகையை வைத்திருந்தார்.

அப்போது பஸ்சில் கிருஷ்ணகிரி அருகே வந்த போது தனது கைப்யை காணாமல் போனதை கண்டு நதியா அதிர்ச்சி அடைந்தார். அருகே நின்ற ஒரு பெண்,  நகை பையை அபேஸ் செய்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி  அடைந்த நதியா, இதுபற்றி கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓடும் பஸ்சில் நகையை திருடி சென்ற மர்ம பெண்ணை தேடி வருகிறார்கள்.

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 8 பவுன் நகை திருடிய சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News