உள்ளூர் செய்திகள்
கைது

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

Published On 2022-02-17 16:02 IST   |   Update On 2022-02-17 16:02:00 IST
கடத்தல் வழக்கில் கைதான சரவணனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டார்.
மாமல்லபுரம்:

வடக்கு மாமல்லபுரம் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரை வடகடம்பாடியை சேர்ந்த ஒருவரை ரூ. 5 லட்சம் கேட்டு கடத்திய வழக்கில் மாமல்லபுரம் போலீசார் ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர்.

இந்த நிலையில் சரவணனை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட கலெக்டர் ராகுல் நாத்துக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து சரவணனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டார்.

Similar News