உள்ளூர் செய்திகள்
வைத்தீஸ்வரன் கோவிலில் மாசிமக தேரோட்டம் நடை பெற்ற போது எடுத்தப்படம். உள்படம் அருள்மிகு சுந்தராம்பிகை உடனாய வைத

திருமழபாடி வைத்தீஸ்வரன் கோவிலில் மாசிமக தேரோட்டம்

Published On 2022-02-17 15:51 IST   |   Update On 2022-02-17 15:51:00 IST
திருமானூர் அருகில் திருமழபாடி வைத்தீஸ்வரன் கோவிலில் மாசிமக தேரோட்டம் நடை பெற்றது.
அரியலூர்: 

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அருள்மிகு சுந்தராம்பிகை உடனாய அருள்மிகு வைத்தியநாத சுவாமி கோவில் மாசிமக பெருவிழா தேரோட்டம் நேற்று நடை பெற்றது. அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா தலைமை தாங்கி தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். 

மாசி மக பெருவிழா பிப்ரவரி 7-ந்தேதி  திங்கட்கிழமை மாலை 7மணிக்கு அனுக்ஞை, விநாயகர் பூஜையுடன் தொடங்கி, 8ந்தேதி காலை 9 மணிக்கு கும்ப லக்கணத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

நாள்தோறும் ஆதி சேஷ வாகனம், பூதவாகனம், கைலாச வாகனம், இடப வாகன காட்சி, யானை வாகனம், திருக்கல்யாணம், குதிரை வாகனம், காமதேனு வாகனம், ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்று நேற்று 16-ந்தேதி அருள்மிகு சுந்தராம்பிகை உடனாய அருள்மிகு வைத்தியநாத சுவாமி காலை 11 மணிக்கு திருத்தேரில்  எழுந்தருளி திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. 

இன்று 17-ந்தேதி தீர்த்தவாரி இடபவாகன காட்சியும் இரவுகொடியிறக்குதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.திருவிழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் ஜெயா.செயல் அலுவலர் மணிவேலன் மற்றும் கிராம பொதுமக்கள் ஏற்பாடு செய்திருந்தனர். 

இதில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேரோட்டத்தையொட்டி 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மருத்துவ முகாமும் அமைக்கப்பட்டிருந்தது.

Similar News