உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

லாவண்யா தற்கொலை சம்பவம் 50 நாட்களில் விசாரணை அறிக்கை தாக்கல்

Published On 2022-02-17 15:18 IST   |   Update On 2022-02-17 15:18:00 IST
லாவண்யா தற்கொலை சம்பவம் 50 நாட்களில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
அரியலூர்:

தஞ்சை மாணவி லாவண்யா தற்கொலை வழக்கில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு நல ஆணைய விசாரணை அறிக்கையை 50 நாட்களுக்குள் அரசிடம் ஆணையத் தலைவர் சமர்ப்பிப்பார் என்று தேசிய குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் கூறினார்.

இது குறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது :
தஞ்சை மாணவி லாவண்யா தற்கொலை வழக்கில் சி.பி.ஐ விசாரணை பாகுபாடு இன்றி நடந்து உரியவர்களுக்கு தண்டனை நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவருடன் இணைந்து சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டேன். இந்த அறிக்கையை 50 நாட்களுக்குள் அரசியடம் ஆணையத்தலைவர் சமர்ப்பிப்பார். அறிக்கை பாகுபாடின்றி வழங்கப்படும் இவ்வாறு அவர் கூறினார். 

Similar News