உள்ளூர் செய்திகள்
காரணைப்புதுச்சேரியில் பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை
காரணைப்புதுச்சேரியில் பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் காரணைப்புதுச்சேரி கோகுலம் காலனி பகுதியை சேர்ந்தவர் சவுமியா என்கிற லட்சுமி பிரியா (வயது 22), பி.எஸ்.சி பட்டப்படிப்பை முடித்த பிறகு வீட்டிலேயே இருந்துள்ளார். இந்த நிலையில் எந்த நேரமும் செல்போனை பார்த்துக் கொண்டிருப்பதாக அவரது பெற்றோர் சவுமியாவை கண்டித்தனர்.
இதனால் மனமுடைந்த சவுமியா வீட்டில் அரளி விதையை அரைத்து சாப்பிட்டுள்ளார். வாயில் நுரை தள்ளியபடி மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.