உள்ளூர் செய்திகள்
கைதான அருண்குமார்

தம்பதியை தாக்கிய அனிதாவின் அண்ணன் கைது

Published On 2022-02-16 15:23 IST   |   Update On 2022-02-16 15:23:00 IST
தம்பதியை தாக்கிய சம்பவத்தில் அனிதாவின் அண்ணனை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர் :


அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் பெரியார்  நகரை சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி வசந்தி (வயது 39). அதே  பகுதியை  சேர்ந்தவர் சண்முகம் மகன் அருண்குமார்  (26).  இவர் கடந்த சில  ஆண்டுகளுக்கு  முன்பு நீட்  தேர்வால்  தற்கொலை செய்து  கொண்ட அனிதாவின்  இரண்டாவது  அண்ணன் ஆவார்.

இந்தநிலையில் சம்பவத் தன்று அந்த தெருவில் வசந்தி நின்று கொண்டு இருந்தார். அப்போது தனது மோட்டார் சைக்கிளில் அருண்குமார் அடிக்கடி வேகமாகவும் தாறு மாறாக வட்டம் அடித்தும் வந்துள்ளார். இதனால் சிரமம் அடைந்த வசந்தி இது குறித்து வசந்தி தனது கணவரிடம் கூறினார். அதன்பேரில் செந்தில் அருண்குமாரை தட்டி கேட்டார்.

அப்போது கணவன், மனைவி இருவரையும் அருண்குமார் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காய மடைந்த அவர்கள் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக  சேர்க்கப்பட்டுள்ளனர்.    

இது  குறித்து வசந்தி கொடுத்த புகாரின் பேரில் பெண் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 4 பிரிவு களில் செந்துறை போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் தன் ராஜ் வழக்குப்பதிவு செய்து அருண்குமாரை கைது செய்துசெந்துறை  நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News