உள்ளூர் செய்திகள்
செங்கல்பட்டில் மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
செங்கல்பட்டில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் திருவண்ணாமலையை சேர்ந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
செங்கல்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வடகாலனி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 47). இவர் சென்னையில் ஒருவரை சந்திப்பதற்காக நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார்.
செங்கல்பட்டு அருகே திண்டிவனம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ராஜாகுளிப்பேட்டை அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் திடீரென தாறுமாறாக ஓடி சாலையில் தடுப்பு சுவரில் மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ஆறுமுகம் உயிருக்கு போராடியபடி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
டாக்டர்கள் பரிசோதித்த போது வரும் வழியிலேயே ஆறுமுகம் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது உடல் அதே ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டது. இது குறித்து ஆறுமுகத்தின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விபத்து தொடர்பாக செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.