உள்ளூர் செய்திகள்
செங்கல்பட்டு மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடை மூடல்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடை மூடப்படுகின்றன.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு தேர்தல் ஆணையம் நடத்தும் சாதாரண நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் 17-02-2022 அன்று காலை 10மணி முதல் 19-02-2022 நள்ளிரவு 12மணி வரையிலும். மேலும் வாக்கு எண்ணிக்கை நாளான 22-02-2022 ஆகிய நாட்களில் மேற்படி வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைந்துள்ள பகுதிகள் மேற்படி பகுதியிலிருந்து 5 கிலோமீட்டர் சுற்றளவுக்குட்பட்ட பகுதிகளிலும் இயங்கி வருகின்ற தமிழ்நாடு அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடங்கள் மூடப்பட்டிருக்கும் என்று அதில் கூறப்பட்டிருந்தன.