உள்ளூர் செய்திகள்
கோவிட் தடுப்பு பாதுகாப்பு உபகரணங்களை கலெக்டர் ரமணசரஸ்வதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த போது எடுத்த படம்.

கொரோனா தடுப்பு உபகரணங்கள் குறித்து கலெக்டர் ஆய்வு

Published On 2022-02-15 15:28 IST   |   Update On 2022-02-15 15:28:00 IST
கொரோனா தடுப்பு உபகரணங்களை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அரியலூர்:


அரியலூர் மாவட்ட ஆட்சி யரகத்தில்  வைக்கப்பட்டுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்த லில் பயன்படுத்தப்பட உள்ள கோவிட் தடுப்பு பாதுகாப்பு உபகரணங்களை கலெக்டர் ரமண சரஸ்வதி நேரில் பார்வையிட்டார்.


இதில் அரியலூர்நகராட் சியில் உள்ள  வாக்குச்சாவடி களில் பயன்டுத்தும்  வகையில் 34 வெப்பமானி  கருவிகள், 100 மி.லிட்டர்  அளவில் 340  கைக்கழுவும் திரவம், 500 மி.லிட்டர் அளவில் 204 கைக்கழுவும் திரவம், 340 முககவசங்கள், 2890 மூன்றடுக்கு முககவசங்கள், 1020 கையுறைகள், 204 பைகள், 29,700 பெரிய கை யுறைகள், 408 முழு உடல் கவசங்கள், 


ஜெயங்கொண்டம் நகராட்சியில் உள்ள வாக்குச் சாவடிகளில் பயன்டுத்தும் வகையில் 38 வெப்பமானி கருவிகள், 100 மி.லிட்டர் அளவில் 380 கைக்கழுவும் திரவம், 500 மி.லிட்டர் அள வில் 228  கைக்கழுவும்திரவம், 370  முககவசங்கள், 3230 மூன்றடுக்கு முககவசங்கள், 1140 கையுறைகள், 228 பைகள், 32,800  பெரிய   கையுறைகள், 456 முழு உடல்  கவசங்கள் ஆகியவை ஒதுக்கீடு  செய்யப் பட்டுள்ளது.


உடையார்பாளையம் பேரூராட்சியில் உள்ள வாக்குச் சாவடிகளில்பயன் படுத்தும் வகையில் 14 வெப்ப மானி கருவிகள், 100 மி.லிட்டர் அளவில் 140 கைக்கழுவும் திரவம், 500 மி.லிட்டர் அளவில்84 கைக்கழுவும் திரவம், 140 முககவசங்கள், 1190 மூன்ற டுக்கு முககவசங்கள், 420 கையுறைகள், 84 பைகள், 10,900 பெரிய கையுறைகள், 168 முழு உடல் கவசங்கள், 


வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் உள்ள  வாக்குச் சாவடிகளில்  பயன்டுத்தும் வகையில் 15 வெப்பமானி கருவிகள்,  100 மி.லிட்டர் அளவில்  150 கைக்கழுவும் திரவம், 500 மி.லிட்டர் அளவில் 90 கைக்கழுவும்   திரவம், 150 முககவசங்கள்,    1275 மூன்றடுக்கு  முககவசங்கள், 450 கையுறைகள், 90 பைகள், 9,000 பெரிய கையுறைகள், 180 முழு உடல் கவசங்கள் ஆகியவை ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. என  கலெக்டர் தெரிவித்தார்.

Similar News