உள்ளூர் செய்திகள்
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலியான சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் :
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே வடுக பாளையம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் தண்டபாணி. ஜெயங்கொண்டத்திலுள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம் போல் மேல் மாடியில் உள்ள தனது அறைக்கு சென்றுள்ளார். அங்கு உணவருந்தி விட்டு கைகளைக் கழுவுவதற்காக தண்ணீரை ஊற்றிய போது எதிர்பாராதவிதமாக கீழே சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் தண்ணீர் பட்டு அதிலிருந்து தண்டபாணி மீது மின்சாரம் பாய்ந்தது.
இதில் சம்பவ இடத்திலேயே தண்டபாணி உயிரிழந்தார். தகலறிந்து வந்த ஜெயங்கொண்டம் போலீசார் பலியான தண்டபாணியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.