உள்ளூர் செய்திகள்
அரசு பள்ளியில் கருவேலமரம் அகற்றும் பணிகள்
அரசு பள்ளியில் கருவேலமரம் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழக்காவட்டாங் குறிச்சி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப்பள்ளியில் 476 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
சமீபத்தில் பாம்புகள் பள்ளி வளாகத்தில் உள்ளே புகுந்ததால் மாணவர்கள் பயந்தனர். பின்னர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்து பாம்புகள் பிடிக்கப்பட்டது. இது குறித்து கலெக்டர் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது.
இதைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் உள்ள கரு வேலமரங்களை அகற்றிடவும், கூடுதல் கட்டிடங்களை கட்டி தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், கோரிக்கை விடுத்திருந்த செய்தி மாலைமலர் நாளிதழில் வெளியிடப்பட்டது.
இதைதொடர்ந்து தற்போது கருவேலமரங்கள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை கண்ட மாணவர்களின் பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், மாலைமலர் நாளிதழுக்கு பாராட்டுகளை தெரிவித் துள்ளனர்.