உள்ளூர் செய்திகள்
அப்பா பைத்தியம் சாமி கோவிலில் 7-ந்தேதி குரு பூஜை
அப்பா பைத்தியம் சாமி கோவிலில் 7-ந்தேதி குரு பூஜை நடக்கிறது.
புதுச்சேரி:
சேலம் மாவட்டம் சூரமங்கலத்தில் உள்ள சற்குரு அப்பா பைத்தியம் சாமிகள் கோவிலில் 22-ம் ஆண்டு குருபூஜை விழா வருகிற 7-ந்தேதி நடக்கிறது.
இதையொட்டி காலை 7 மணி முதல் ஞானவிநாயகர், ஞானமுருகர், சற்குரு அப்பா பைத்தியம் சாமிகளுக்கு மகா அபிஷேகம், 12.30 மணிக்கு மகாதீபாராதனை நடக்கிறது. மதியம் 1 மணிக்கு அன்னமளிப்பு விழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீசற்குரு அப்பா பைத்தியம் சாமிகளின் பக்தர்கள் செய்து வருகின்றனர்.
இதேபோல புதுவை திலாசுப்பேட்டையில் உள்ள அப்பா பைத்தியம் சாமி கோவிலும் வருகிற 7-ந்தேதி குருபூஜை விழா நடக்கிறது. காலை 7 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, புனிதநீர் வழிபாடு நடக்கிறது. 7.30 மணிக்கு அப்பா பைத்தியம் சாமிக்கு தமிழில் வேள்வி வழிபாடு.
காலை 9 மணிக்கு வேள்வி நிறைவு, திருமுறை விண்ணப்பம், தீபாராதனை ந டக்கிறது. பிற்பகல் 1 மணிக்கு அபிஷேகம், திருக்குட நன்னீராட்டு, 12 மணிக்கு திருமுறை விண்ணப்பம், தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.