உள்ளூர் செய்திகள்
கொரோனா வைரஸ்

பொது இடத்தில் அத்துமீறல்- போலீசாரால் கைதான சிறுவனுக்கு கொரோனா

Published On 2022-02-02 15:40 IST   |   Update On 2022-02-02 15:40:00 IST
காரைக்காலில் பொது இடத்தில் அத்துமீறியதாக போலீசாரால் கைதான சிறுவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

காரைக்கால்:

காரைக்கால் நகர் பகுதியில், 9-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை (வயது 14), கூலி வேலை செய்துவரும் சிறுவன் (17) ஒருவன், கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தான். பல நாட்கள் வெளியில் சுற்றி வந்த இந்த இளம் காதல் ஜோடி, காரைக்கால் கடற்கரைக்கு சென்று சுற்றியுள்ளனர். அப்போது பொது இடத்தில் இருவரும் அத்துமீறி நடந்து கொண்டனர்.

அப்போது அங்கு வந்த சிறுமியின் தந்தை, 2பேரையும் கையும், களவுமாக பிடித்து கடுமையாக கண்டித்துள்ளார். பின்னர் சிறுவனை காரைக்கால் டவுன் போலீசில் ஒப்படைத்தார். மேலும் சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில், சிறுவன் மீது போலீசார் போக்சோ வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

தொடர்ந்து அரசு சட்ட விதிகள் படி, சிறுவனை காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை செய்தனர். சோதனையின் முடிவில் சிறுவனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து சிறுவன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

Similar News