உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

புதுச்சேரியில் கொரோனாவுக்கு 6 பேர் பலி

Published On 2022-02-02 13:32 IST   |   Update On 2022-02-02 13:32:00 IST
புதுச்சேரியில் கொரோனாவுக்கு 6 பேர் பலியாகியுள்ளனர்.
புதுச்சேரி:

புதுவையில் 1-ந் தேதி  3 ஆயிரத்து 633 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில் புதிதாக ஆயிரத்து 742 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 531, காரைக்காலில் 136, ஏனாமில் 65, மாகியில் 10 பேர்   புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

புதுவையில் 99, காரைக்காலில் 29, ஏனாமில் 8, மாகியில் 10 பேர் என 146 பேர்   தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
புதுவையில் 2 ஆயிரத்து 139, காரைக்காலில் 610, ஏனாமில் 389,  மாகியில் 13  பேர் என 3 ஆயிரத்து 151 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். 

புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 633 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 840 பேர்   குணமடைந்துள்ளனர்.  

புதுவையில் 4 ஆயிரத்து 278, காரைக்காலில் ஆயிரத்து 949, ஏனாமில் 434, மாகியில் 45 பேர் என 6 ஆயிரத்து 706 பேர்  வீட்டு  தனிமையில் உள்ளனர். 

புதுவை மாநிலத்தில் இப்போது 6 ஆயிரத்து 852 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர்.  புதுவை அரும்பார்த்தபுரத்தை சேர்ந்த 84 வயது மூதாட்டி, ராமநாதபுரத்தை சேர்ந்த 76 வயது முதியவர், தந்தை பெரியார் நகரை சேர்ந்த 62 வயது பெண், சாந்தி நகரை சேர்ந்த 89 வயது முதியவர், மணக்குள விநாயகர் நகரை சேர்ந்த 81 வயது முதியவர், காரைக்கால் நெடுங்காடை சேர்ந்த 77 வயது மூதாட்டி என 6 பேர் கொரோனா சிகிச்சை பலனின்றி இறந்தனர். 

இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு  பலியா னோர்  எண்ணிக்கை ஆயிரத்து 941 ஆக உயர்ந்துள்ளது. புதுவையில் 2-வது  தவணை உள்பட 15 லட்சத்து 37 ஆயிரத்து 182 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். 
இத்தகவலை  சுகா தாரத்துறை தெரிவித்து உள்ளது. 

புதுவையில் தொற்று எண்ணிக்கை குறைந்தாலும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Similar News