உள்ளூர் செய்திகள்
வாலிபர் சங்கத்தினர் போராட்டம் நடத்திய காட்சி.

வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டம்

Published On 2022-02-02 12:38 IST   |   Update On 2022-02-02 12:38:00 IST
பொதுமக்களுக்கு அல்வா கொடுத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி:

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் காமராஜர் சிலை சதுக்கத்தில் அல்வா வழங்கும் போராட்டம் நடந்தது.

கார்ப்பரேட் ஆதரவு மத்திய பட்ஜெட்டை கண்டித்தும், மின்துறையை தனியார் மயமாக்க துடிக்கும் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி அரசை கண்டித்தும் இந்த நூதன போராட்டம் நடந்தது. 

போராட்டத்துக்கு பிரதேச தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார். பொருளாளர் 
சஞ்சய் முன்னிலை வகித்தார். பிரதேச செயலாளர் ஆனந்த் கண்டன உரையாற்றினார். 

போராட்டத்தில் நிர்வாகிகள் ரஞ்சித், பிரதாப், நவீன், நிலவழகன், கவுசிகன், ராஜ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். 

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு அல்வா வழங்கினர்.

Similar News