உள்ளூர் செய்திகள்
மின்துறை தனியார்மய எதிர்ப்பு தி.மு.க.- காங். கூட்டணிகட்சிகள் ஆலோசனை
மின்துறை தனியார்மய எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.- காங். கூட்டணிகட்சிகள் ஆலோசனை கூட்டம் நடத்தனர்.
புதுச்சேரி:
புதுவை அரசின் மின் துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
தனியார் மயத்தை கண்டித்து மின்துறை ஊழியர்கள் பிப்ரவரி 1-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்க உள்ளனர்.
இந்நிலையில் அரசியல் கட்சியினர் மின்துறை ஊழியர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் ஜெயராம் ஓட்டலில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.
கூட்டத்துக்கு மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், எதிர்கட்சித் தலைவர் சிவா ஆகியோர் தலைமை வகித்தனர். தி.மு.க. அவைத்தலைவர் எஸ்.பி.சிவக்குமார், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், முன்னாள் எம்.எல்.ஏ. நாரா. கலைநாதன், மார்க்சிஸ்டு ராஜாங்கம், பெருமாள், முன்னாள் எம்.எல்.ஏ. நீலகங்காதரன், விடுதலை சிறுத்தைகள் முதன்மை செயலாளர் தேவபொழிலன், புதியநீதிக்கட்சி பொன்னுரங்கம், ம.தி.மு.க. கபிரியேல், கம்யூனிஸ்ட் (எம்.எல்) சோ.பாலசுப்பிரமணியம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள், இயக்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், மின்துறை ஊழியர்களின் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது. மேலும் மின்துறை தனியார் மயத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம், ஊர்வலம், பந்த் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.