உள்ளூர் செய்திகள்
காந்தி உருவபடத்துக்கு கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காட்சி.

காந்தி சிலைக்கு கவர்னர் தமிழிசை-ரங்கசாமி மாலை

Published On 2022-01-30 13:45 IST   |   Update On 2022-01-30 13:45:00 IST
மகாத்மா காந்தியின் 75-வது நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
புதுச்சேரி:

புதுவை அரசு சார்பில் கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலைக்கு  கவர்னர் தமிழிசை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச் சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், சாய்.ஜெ.சரவணன்குமார், துணை சபாநாயகர் ராஜ வேலு,  எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி. ஆறுமுகம், கே.எஸ்.பி. ரமேஷ், பாஸ்கர், லட்சுமிகாந்தன் ஆகியோர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து  தேசபக்தி பாடல்கள் இசைக்கப்பட்டது. பின்னர்,  2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Similar News