உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

வக்கீல் அலுவலகத்தில் கதவை உடைத்து பணம்-வெள்ளி பொருட்கள் கொள்ளை

Published On 2022-01-30 12:46 IST   |   Update On 2022-01-30 12:46:00 IST
பெரியகாலாப்பட்டில் வக்கீல் அலுவலகத்தில் கதவை உடைத்து பணம்-வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
புதுச்சேரி:

புதுவை பெரிய காலாப்பட்டு மெயின் ரோட்டில் தனியார் வணிக  வளாகம் பின்புற பகுதியில் வசிப்பவர் முருகன் (வயது 42). இவர் புதுவை கோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்து வரு கிறார். 

இவரது அலுவலகம் பெரிய   காலாப்பட்டு கிழக்கு கடற்கரை மெயின் ரோட்டில் நுழைவு வாயில் அருகே உள்ளது. 

28-ந் தேதி முருகன் தனது அலுவலக வேலையை முடித்து அலு வலகத்தை பூட்டி விட்டு சென்றார்.

29-ந் தேதி அலுவலகத்துக்கு வந்த போது கதவு உடைக்கப்பட்டு   திறந்து கிடந்ததை கண்டு முருகன் அதிர்ச்சி   அடைந்தார். பீரோவும் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தது.

பீரோவில் வைத்திருந்த ரூ.45 ஆயிரம் ரொக்க பணம், 2 வெள்ளி கை காப்பு மற்றும் விலை உயர்ந்த செல்போன் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதன்  மொத்த மதிப்பு ரூ.69 ஆயிரம் ஆகும்.

யாரோ மர்ம நபர்கள் நள்ளிரவில்  அலுவலக கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த பணம், வெள்ளி நகைகள் மற்றும் செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து வக்கீல் முருகன் காலாப்பட்டு   போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்&இன்ஸ் பெக்டர் அருள்மணி மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

மேலும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை பதிவு செய்தனர். 

தொடர்ந்து அங்குள்ள கண்காணிப்பு கேமராக் களை ஆய்வு செய்து கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

Similar News