உள்ளூர் செய்திகள்
தமிழக பாடத்திட்டத்தில் புதுவை வரலாறு-திண்டுக்கல் ஐ.லியோனி உறுதி
தமிழக பாடத்திட்டத்தில் புதுவை வரலாறு சேர்க்கப்படும் என்று எதிர்கட்சி தலைவர் சிவாவிடம் திண்டுக்கல் ஐ.லியோனி உறுதி அளித்துள்ளார்.
புதுச்சேரி:
தமிழ்நாடு பாட நூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனியை புதுவை தி.மு.க. மாநில அமைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான சிவா சந்தித்து பேசினார்.
அப்போது புதுவைக்கு என்று தனி பாடநூல் கழகம் இல்லாததால் புதுவையின் வரலாற்றை புதுவை மற்றும் தமிழக மாணவர்கள் தெரிந்துகொள்ள முடியாத நிலை உள்ளது. எனவே புதுவையின் வரலாற்றை தமிழக பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று தமிழக முதல்- அமைச்சர் ஸ்டாலினை சந்தித்து கொடுத்த மனுவில் நகலையும் வழங்கினார். அதற்கு திண்டுக்கல் ஐ.லியோனி நிச்சயம் புதுவையின் வரலாற்றை தமிழக பாடத்திட்டத்தில் சேர்ப்பதாக உறுதியளித்தார். இந்த சந்திப்பின்போது தி.மு.க. துணை அமைப்பாளர் செந்தில்குமார் உடன் இருந்தார்.