உள்ளூர் செய்திகள்
ஆற்றின் கரையை பலப்படுத்தும் பணியை அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்.

ரூ.96 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள்- அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்

Published On 2022-01-27 07:34 GMT   |   Update On 2022-01-27 07:34 GMT
மண்ணாடிப்பட்டு தொகுதியில் ரூ.96 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:

புதுவை அரசின் ஊரக வளர்ச்சித்துறை சார்பில்  வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை  உறுதி திட்டத்தின் கீழ்  மண்ணாடிப்பட்டு தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க விழா  நடைபெற்றது.

நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்  தலைமை தாங்கி  ரூ.96 லட்சம்   மதிப்பீட்டில் திருக்கனூர், கூனிச்சம்பட்டு, கொடாத்தூர்,  எல்.ஆர். பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கிராவல்  சாலை அமைத்தல் மற்றும் மண்ணாடிப்பட்டில் திரவுபதி அம்மன் கோவில் குளத்தை  சீரமைத்தல், வாதானூரில் ஏரியை தூர்வாருதல்  உள்ளிட்ட பணிகளை  தொடங்கி வைத்தார். 

நிகழ்ச்சியில் மண்ணா டிப்பட்டு  கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில் ராஜன் மற்றும் வில்லியனூர்  வட்டார வளர்ச்சி அலுவலகம் அதிகாரிகள், பா.ஜனதா பிரமுகர்கள், கிராம பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News