உள்ளூர் செய்திகள்
கைது

கிழக்கு கடற்கரை சாலையில் காய்கறி கடையில் திருடிய 2 பேர் கைது

Published On 2022-01-27 02:44 GMT   |   Update On 2022-01-27 02:44 GMT
லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள காய்கறி கடையில் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி:

புதுச்சேரி லாஸ்பேட்டை கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் அரவிந்த்குமார் (வயது 23). இவர் கிழக்கு கடற்கரை சாலையில் காய்கறி கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் வியாபாரம் முடிந்து அரவிந்த்குமார் கடையை மூடிவிட்டு சென்றார்.

மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது, கடையின் மேற்கூரை பிரிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.2,500 ரொக்க பணம் திருடு போயிருந்தது.

இதுகுறித்து அவர், லாஸ்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது கடையின் கூரையை 2 வாலிபர்கள் பிரித்து இறங்குவது பதிவாகி இருந்தது. உடனே அவர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர்.

இதற்காக கேமரா காட்சிகளை மற்ற போலீசாரிடம் பகிர்ந்து விசாரணையை முடுக்கி விட்டனர்.

ஒதியஞ்சாலை போலீஸ் நிலைய காவலர் ஒருவர் வாகன சோதனை நடத்தியபோது 2 பேரை பிடித்து விசாரித்த போது அவர்கள் லாஸ்பேட்டை காய்கறி கடையில் திருடியவர்கள் என்பது தெரியவந்தது. இதுபற்றி தெரிவித்து லாஸ்பேட்டை போலீசாரை வரவழைத்து அவர்களிடம் இருவரும் ஒப்படைக்கப்பட்டனர்.

இதையடுத்து அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கோவிந்தசாலை கண்டாக்டர் தோட்டம் பிரியதர்ஷினி நகரைச் சேர்ந்த சஞ்சய்குமார் (19), ஸ்டிக்கர் மணி (21) என்பது தெரியவந்தது.

இவர்கள் அரவிந்தகுமாரின் காய்கறி கடையில் பணம், செல்போன் சார்ஜரை திருடியதை ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து கொரோனா பரிசோதனைக்குப்பின் கோர்ட்டில் ஆஜர் படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News