உள்ளூர் செய்திகள்
விவசாயிகள் சங்க மாநில கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு கேட்டு ஆர்ப்பாட்டம்

Published On 2022-01-26 14:35 IST   |   Update On 2022-01-26 14:35:00 IST
போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு கேட்டு 31-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
புதுச்சேரி: 

புதுவை விவசாயிகள் சங்க மாநில குழு கூட்டம் விவசாயிகள் சங்க தலைமை அலுவலகத்தில் சங்க தலைவர் கீதநாதன் தலைமையில் நடைபெற்றது.  கூட்டத்தில் சிறப்பு தலைவர் மாசிலாமணி, துணை பொதுச்செயலாளர்  ராஜா, செயலாளர் பெருமாள்,  மாநிலக்குழு உறுப்பினர்கள் கொம்பாக்கம் பெருமாள்,  ராமமூர்த்தி, கருணாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளராக பல ஆண்டு காலம் செயல்பட்ட டாக்டர் துரை மாணிக்கம் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மத்திய பா.ஜனதா அரசு நாடாளுமன்றத்தில் அறிவித்தபடி எழுத்துப்பூர்வமான ஒப்பந்தத்தை செயல்படுத்தவில்லை. மாநில அரசுகள் விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை இதுவரை வாபஸ் பெறவில்லை. உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவில்லை. குறைந்தபட்ச ஆதார விலையை பற்றி தீர்மானிக்க அமைக்கப்பட்ட குழுவோடு அரசு பேச்சு வார்த்தையை தொடரவில்லை. 

விவசாயிகள் மீது காரை ஏற்றி கொலை செய்த நிகழ்வில் தொடர்புடைய  மத்திய மந்திரியை  பதவி யில் இருந்து நீக்காமல் உள்ள பிரதமர் மோடி செயலை   கண்டிக்கின்ற வகையில் வருகிற 31-ந்தேதி நாடு தழுவிய அளவில் துரோக தினம் கடைபிடிக்கப்படுகிறது. அன்று காலை 10 மணியளவில் புதுவை அண்ணாசிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது.

புதுவை அரசு லிங்காரெட்டிபாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க கோரியும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்க வலியுறுத்தி பிப்ரவரி 16-ந்தேதி காலை 10 மணியளவில் காட்டேரிகுப்பத்தில் ஆர்ப் பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Similar News