உள்ளூர் செய்திகள்
குடியரசு தினவிழா

புதுவை- தெலுங்கானா 2 மாநிலங்களில் தேசிய கொடி ஏற்றிய கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

Published On 2022-01-26 12:11 IST   |   Update On 2022-01-26 12:11:00 IST
ஒரு கவர்னர் 2 மாநிலங்களில் தேசிய கொடியை ஏற்றி வைத்தது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது

புதுச்சேரி:

தெலுங்கானா மாநில கவர்னராக இருந்து வருபவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்.

இவர் புதுவை கவர்னர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வருகிறார். இன்று குடியரசு தினத்தையொட்டி அவர் புதுவை மற்றும் தெலுங்கானாவில் தேசிய கொடி ஏற்றுவார் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி இன்று காலை கவர்னர் தமிழிசை முதலில் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடந்த குடியரசுதின விழாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

மேலும் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொண்டார். ஐதராபாத்தில் உள்ள சுதந்திர போராட்ட வீரர்களின் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் தனி விமானம் மூலம் புதுவை வந்த அவர் புதுவை கடற்கரை சாலையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

ஒரு கவர்னர் 2 மாநிலங்களில் தேசிய கொடியை ஏற்றி வைத்தது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... தமிழகம் முழுவதும் நாளை ‘பூஸ்டர்’ தடுப்பூசி முகாம் 600 இடங்களில் நடக்கிறது

Similar News