உள்ளூர் செய்திகள்
புதுவையில் கொரோனாவுக்கு 4 பேர் பலி
புதுவையில் புத்தாண்டுக்கு பிறகு நாள்தோறும் கொரோனா தொற்றின் தாக்கம் வேகமாக பரவி வருகிறது.
புதுச்சேரி:
நாள்தோறும் சுமார் 2 ஆயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா சிகிச்சை பலனின்றி பலியானோர் எண்ணிக்கையும் நாள் தோறும் உயர்ந்து வருகிறது.
புதுவையில் 24-ந் தேதி 5 ஆயிரத்து 191 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில் புதிதாக ஆயிரத்து 911 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் ஆயிரத்து 410, காரைக்காலில் 331, ஏனாமில் 151, மாகியில் 19 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுவையில் 158, காரைக்காலில் 38, ஏனாமில் 12, மாகியில் 15 பேர் என 223 பேர் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுவையில் ஆயிரத்து 77, காரைக்காலில் 40, ஏனாமில் 19, மாகியில் 29 பேர் என ஆயிரத்து 165 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 254 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 948 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
புதுவையில் 12 ஆயிரத்து 380, காரைக்காலில் 3 ஆயிரத்து 12, ஏனாமில் 655, மாகியில் 124 பேர் என 16 ஆயிரத்து 171 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர்.
புதுவை மாநிலத்தில் இப்போது 16 ஆயிரத்து 394 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர். புதுவை கல்மண்டபத்தை சேர்ந்த 76 வயது மூதாட்டி, கோரிமேட்டை சேர்ந்த 67 வயது ஆண், திருவண்டார்கோவிலை சேர்ந்த 55வயது ஆண், திருநள்ளாறை சேர்ந்த 68 வயது மூதாட்டி என 4 பேர் கொரோனா சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 912 ஆக உயர்ந்துள்ளது.
புதுவையில் 2-வது தவணை உள்பட 15 லட்சத்து 24 ஆயிரத்து 836 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
இத்தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.