உள்ளூர் செய்திகள்
சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆய்வு செய்த காட்சி.

சட்டசபை அலுவலகத்தில் சபாநாயகர் திடீர் ஆய்வு

Published On 2022-01-24 14:41 IST   |   Update On 2022-01-24 14:41:00 IST
புதுவை சட்டசபை அலுவலகத்தில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆய்வு செய்தார்.
புதுச்சேரி:
புதுவை சட்டசபை செயலகம் மற்றும் அதனை சார்ந்த அலுவலகங்களில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஊழியர்களின் வருகை மற்றும் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். 

தொடர்ந்து ஊழியர்களிடம் பணிநேரத்தில் அலுவலகத்தில் இருக்கவும், பணிகள் தேக்கம் இல்லாமல் பணிபுரியவும் அறிவுறுத்தினார். ஆய்வின்போது சட்டசபை செயலர் முனுசாமி, சபாநாயகரின் தனி செயலர் தயாளன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Similar News