உள்ளூர் செய்திகள்
கைது

புதுச்சேரி கவர்னர் பெயரில் போலியான தகவல் பரப்பியவர் கைது

Published On 2022-01-24 03:08 GMT   |   Update On 2022-01-24 03:08 GMT
சமூக வலைத்தளத்தில் புதுச்சேரி கவர்னர் பெயரில் போலியான தகவல் பரப்பியவரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:

புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை இரவு முதல் திங்கட்கிழமை காலை வரை ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்றும், வழிபாட்டு தலங்கள், ஊர்வலத்துக்கு தடை விதிப்பதாகவும் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பெயரில் தகவல் பரவியது.

இந்த உத்தரவை கண்டு அரசு அதிகாரிகள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதே சமயம் அந்த உத்தரவு போலியானது என கவர்னர் மாளிகை விளக்கம் அளித்தது. மர்மநபர் சமூக வலைத்தளத்தில் போலியான தகவலை வெளியிட்டதாக மாவட்ட கலெக்டர் வல்லவன் சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் உருவையாறு பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் என்பவர் போலியான தகவலை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டது தெரியவந்தது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனா பரவல் 2-வது அலையின் போது கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்ட உத்தரவை திருத்தி மீண்டும் வெளியிட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News