உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் அருங்காட்சியகத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தடை

Published On 2022-01-23 15:39 IST   |   Update On 2022-01-23 15:39:00 IST
மாமல்லபுரம் கலங்கரை விளக்கமும் இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக, சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

மாமல்லபுரம்:

மாமல்லபுரத்தில் மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை மற்றும் கலங்கரைவிளக்க இயக்குனரகத்தின் கீழ் கலங்கரைவிளக்கம், கடல்சார் அருங்காட்சியகம் ஆகியவை இயங்கி வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மாமல்லபுரத்தில் ஏசி வசதியுடன் இயங்கும் கடல்சார் அருங்காட்சியமும், குறுகிய வழியுடைய கலங்கரை விளக்கமும் இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக, சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

Similar News