உள்ளூர் செய்திகள்
கைது

நாவலூர் அருகே கஞ்சா விற்ற வடமாநில வாலிபர் கைது

Update: 2022-01-22 09:48 GMT
பழைய மாமல்லபுரம் சாலை நாவலூர் அருகே கஞ்சா விற்றது தொடர்பாக வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருப்போரூர்:

பழைய மாமல்லபுரம் சாலை நாவலூர் பகுதியில் உள்ள தனியார் உணவகங்கள் அருகே ஆன்லைனில் உணவு டெலிவரியில் வேலை செய்வது போல் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஐடி ஊழியர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

கானத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலு தலைமையில் தாழம்பூர் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிவது போல் உடை அணிந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவரை கைது செய்து தாழம்பூர் காவல் நிலையம் அழைத்துசென்று விசாரணை மேற்கொண்ட போது அவர் ஓடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிரகாஷ்குமார் சேனாபதி (வயது 30) என்பது தெரியவந்தது. இவரிடமிருந்து 1 கிலோ 250 கிராம் எடை கொண்ட கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News