கொளப்பாக்கம் அருகே பெண்ணிடம் செல்போன் பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொளப்பாக்கம் அருகே பெண்ணிடம் செல்போன் பறிப்பு
பதிவு: ஜனவரி 22, 2022 09:09 IST
கோப்பு படம்
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரை அடுத்த கொளப்பாக்கம் அண்ணா நகர் அன்னை தெரசா தெருவை சேர்ந்தவர் முனியம்மாள் (வயது 53). இவர் நேற்று முன்தினம் கொளப்பாக்கம் அருகே சாலை ஓரமாக நின்று போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் முனியம்மாள் கையிலிருந்த செல்போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார்.
இதுகுறித்து முனியம்மாள் ஓட்டேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.