காஞ்சிபுரம் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சோமசுந்தரத்தின் மூத்த சகோதரரும், பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் முதல்வருமான டாக்டர் டி.வி.ராஜேந்திரன் மறைவிற்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சோமசுந்தரத்தின் மூத்த சகோதரரும், பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் முதல்வருமான டாக்டர் டி.வி.ராஜேந்திரன் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தப்பட்டோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.