ஆம்பூர் அருகே திருட வந்த வாலிபரை வீட்டுக்குள் வைத்துப் பொதுமக்கள் பூட்டினர்.
திருட வந்தவரை வீட்டுக்குள் பூட்டிய மக்கள்
பதிவு: ஜனவரி 15, 2022 14:35 IST
கோப்புப்படம்
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலை பகுதியை சேர்ந்தவர் கோதண்டன்) வயது 55). கூலி தொழிலாளி. இவரது மனைவி சிந்து நேற்று முன்தினம் இரவு கணவன் மனைவி இருவரும் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர்.
நள்ளிரவு 12 மணி அளவில் வீட்டின் பின்புறம் வழியாக வீட்டிற்குள் நுழைந்த வாலிபர் ஒருவர் பீரோவைத் திறந்து அதில் இருந்து நகை பணத்தை திருடிக் கொண்டிருந்தார். பீரோ திறக்கும் சத்தம் கேட்டு எழுந்த சிந்து கத்தி கூச்சலிட்டார். சிந்துவின் குரலை கேட்ட அக்கம்பக்கத்தினர் அவர்கள் வீட்டிற்கு முன்பாக திரண்டனர்.
அப்போது வீட்டிற்குள் இருந்து திருடன் தப்பி ஓட முயன்றார். அவரை மடக்கிபிடித்த பொதுமக்கள் சரமாரியாக தாக்கி வீட்டு அறைக்குள் வைத்து பூட்டினார். இதுகுறித்து தகவலறிந்து ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து திருட முயன்ற வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த வினோத் (19) என தெரியவந்தது. வினோத் மீது ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் வினோத்தை கைது செய்தனர்.