உள்ளூர் செய்திகள்
கைது

6-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்: போக்சோ சட்டத்தில் 2 பேர் கைது

Published On 2021-12-26 14:14 IST   |   Update On 2021-12-26 14:14:00 IST
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே 6-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை காள வாசல் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி பக்கத்து ஊரில் உள்ள பள்ளியில் 6-ம் படித்து வருகிறார்.

சம்பவத்தன்று இவர் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்டு விட்டு கழிவுகளை குப்பை தொட்டியில் போட சாலைக்கு சென்றார். அப்போது அங்கு 2 பேர் அமர்ந்திருந்தனர்.

அவர்கள் சிறுமியை அழைத்தனர். எதற்கு அழைக்கின்றனர்? என சிறுமி அங்கு சென்றார். அப்போது 2 பேரும் சிறுமியை வாயை பொத்தி கடத்தி சென்றனர். அவர்கள் மறைவான பகுதியில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதுபற்றி வெளியே கூறினால் கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் பயந்துபோன சிறுமி வீட்டிற்கு வந்து யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார்.

ஆனால் 2 நாட்களாக சிறுமியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த தந்தை இதுபற்றி கேட்டபோது, அவரிடம் நடந்த சம்பவங்களை சிறுமி கூறினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் மேலும் விசாரித்த போது பார்த்தால் அடையாளம் காட்டிக்காட்டுவேன் என சிறுமி தெரிவித்தார்.

இதுகுறித்து ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து போலீசார் சிறுமியை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது அங்கு அவரை பாலியல் பலாத்காரம் செய்த 2 பேரும் இருந்துள்ளனர். அவர்களை சிறுமி அடையாளம் காண்பித்தார். இதனை தொடர்ந்து 2 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள் தொம்பக்குளத்தைச் சேர்ந்த சிவக்குமார் (47), வெங்கடேஷ்பாபு (40) என தெரியவந்தது.

Similar News