உள்ளூர் செய்திகள்
திருட்டு

சிவகாசி அருகே அச்சகத்தில் பணம் திருட்டு

Published On 2021-12-25 17:09 IST   |   Update On 2021-12-25 17:09:00 IST
சிவகாசி அருகே அச்சகத்தில் பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகாசி காளியப்பா நகரை சேர்ந்தவர் அற்புதராஜ் (வயது 54). இவருக்கு சொந்தமான அச்சகம் தெய்வானை நகரில் உள்ளது. இந்த நிலையில் அற்புதராஜ் வழக்கம்போல் வேலை முடிந்ததும் அச்சகத்தை பூட்டி விட்டு சென்றார். பின்னர் மறுநாள் காலையில் அற்புதராஜ் அச்சகத்திற்கு வந்தபோது அலுவலகத்தின் கதவு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியுற்றார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பணப்பெட்டியில் வைத்திருந்த ரூ.50 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அற்புதராஜ் சிவகாசி டவுன் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிராஜூதீன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

Similar News