உள்ளூர் செய்திகள்
சாத்தூர் அருகே பள்ளி பஸ் மோதி கல்லூரி மாணவி பலி
சாத்தூர் அருகே பள்ளி பஸ் மோதி கல்லூரி மாணவி பலியான சம்பவம் தொடர்பாக ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.
சாத்தூர்:
விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் பகுதியை சேர்ந்தவர்கள் சந்திரா தேவி (வயது 23), கரோலின் எஸ்தர்(23).
இருவரும் சாத்தூரில் உள்ள கூட்டுறவு தொழில் கல்லூரியில் பயின்று வருகின்றனர். நேற்று மாலை கல்லூரி முடிந்து இருவரும் மொபட்டில் வீட்டுக்கு புறப்பட்டனர்.
சிவகாசி சாலையில் மேட்டமலை அருகே சென்றபோது அந்த வழியாக பஸ் மாணவிகள் ஓட்டிச்சென்ற மொபட் மீது மோதியது.
இதில் சந்திராதேவி, கரோலினா எஸ்தர் ஆகியோர் படுகாயமடைந்தனர். ஆனால் சந்திராதேவி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்த சாத்தூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கரோலின் எஸ்தரை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைகாக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து பள்ளி பஸ் ஓட்டிய ஓட்டுநர் மேட்டுப்பட்டியை சேர்ந்த வேலுச்சாமி (53) என்பவரை போலீசார் கைது செய்தனர்.